எல்லையில் ஊடுருவல் முயற்சி: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

எல்லையில் ஊடுருவல் முயற்சியை ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
எல்லையில் ஊடுருவல் முயற்சி: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள அசல் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி நடைபெறுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து குறிப்பிட்ட இடத்தில்  பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது, பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை கண்டறிந்தனர்.

இதை தடுக்க முற்பட்ட போது, பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடியை கொடுத்தனர். இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனரா? என்று பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் அப்பகுதியில் ஈடுபட்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com