காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். ஹக்ரிபுரா என்ற பகுதியில் தேடுதல்வேட்டை நடத்திய போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிரிழந்த பயங்கரவாதிகளின் பெயர், எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியில் இன்னும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com