காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது மூண்ட சண்டையில் அன்சார் கஸ்வத்துல் ஹிந்த், லஷ்கர்-இ-தொய்பா ஆகிய பயங்கரவாத இயக்கங்களைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்கள் இருவரும், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஸ்ரீநகரின் கோன்மோ பகுதியில் நடந்த ஒரு பஞ்சாயத்து தலைவர் கொலை உள்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள். சமீபத்தில்தான் அவர்கள் திரால் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com