காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள குர் ஹாஜிபோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராஷ்டிரிய ஆயுதப்படை வீரர்கள், சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் மாநில போலீசார் அடங்கிய கூட்டுப்படையினர் அந்த குறிப்பிட்ட பகுதியை சுற்றிவளைத்தனர்.

இதனால் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதனால் தேவையின்றி யாரும் அசம்பாவிதத்தில் ஈடுபடாமல் தடுக்கும் விதமாக அந்த பகுதியில் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டனர். ஆனால் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் பலர் தெருக்களில் இறங்கி பாதுகாப்பு படையினருடன் சிறிதுநேரம் மோதலில் ஈடுபட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com