கோவாவில் அமோனியா வாயு கசிவு: கிராம மக்கள் வெளியேற்றம், 2 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி

கோவாவில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதயையடுத்து அவசர அவசரமாக கிராம மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். #gasleak | #Goa
கோவாவில் அமோனியா வாயு கசிவு: கிராம மக்கள் வெளியேற்றம், 2 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி
Published on

பானஜி,

கோவா மாநிலம் வாஸ்கோ சிட்டியில் இருந்து பானஜிக்கு அமோனியா வாயு ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி அதிகாலை 2.45 மணியளவில் மோர்முகா என்ற நகரம் அருகாமையில் உள்ள சிகலிம் கிராமம் வழியாக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி நடு ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், டேங்கர் லாரியில் இருந்த அமோனியா வாயு கசிய துவங்கியது.

இதையடுத்து, பேரிடர் மீட்பு குழு சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பி அவைக்கப்பட்டது. அதிகாலையில் தூங்கி கொண்டு இருந்த மக்களை எழுப்பி விடும் பணியில் போலீஸ் மாற்றும் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். உடனடியாக அனைவரும் வாயு கசிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக கூறிய இரண்டு பெண்கள், அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக சிக்லிம் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தும் வேறு பாதை வழியாக திருப்பி விடப்பட்டன. விபத்து ஏற்பட்ட பகுதி அருகே, கிட்டதட்ட 300 வீடுகள் உள்ளன. இதற்கு சில கி.மீட்டர் தொலைவில்தான் கோவாவின் டபோலிம் விமான நிலையம் உள்ளது. #gasleak | #Goa

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com