உத்தர பிரதேசத்தில் கட்டிட சுவர் இடிந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் கட்டிட சுவர் இடிந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
Published on

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் கவுதம புத்த நகரில், பிரிவு 20 பகுதியில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்துள்ளது. இதில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்றிரவு கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இதில், 2 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். எனினும், நள்ளிரவு சூழல் மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை காப்பாற்ற உடனடியாக யாரும் வராத நிலையில் அவர்கள் உயிரிழந்து உள்ளனர்.

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய ஒப்பந்ததாரர் மற்றும் மற்றொரு தொழிலாளரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com