விபத்தின்போது காரின் ஏர்பேக் திறந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

கேரளாவில் விபத்தின்போது காரின் ஏர்பேக் திறந்ததில் 2 வயது குழந்தை உயிரிழந்தது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மலப்புரம்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் விபத்தின்போது காரின் ஏர்பேக் திறந்ததில் 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை 2 வயது குழந்தை உட்பட ஒரு குடும்பத்தைச் சேரந்த 5 பேர் கோட்டக்கல்லில் இருந்து படபரம்ப நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார், டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. கார் விபத்துக்குள்ளான நிலையில், மோதலின் தாக்கத்தில் காரில் இருந்து ஏர்பேக் திறந்து வெளிவந்தது.

அப்போது காரின் முன் இருக்கையில் தாயின் மடியில் அமர்ந்திருந்த 2 வயது குழந்தை மீது வேகமாக வெளிவந்த ஏர்பேக் மோதியதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் தாய் உட்பட மற்ற 4 பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com