

புதுடெல்லி,
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். மக்கள் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. மேலும் வட மாநிலங்களில் 64 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு 34 ரயில்களின் நேரம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டள்ளது. இதனால், விமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கடும் பனிமூட்டம் காரணமாக விமானம், ரயில்களில் பயணிப்போர் கடும் அவதிக்குள்ளாகினர். முக்கிய நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளைக்குகளை எரிய விட்ட படியே சென்றனர். #Delhi #fog