

20 கிராமங்கள்
கிருஷ்ணா மேலணை திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரம் வருமாறு:-
கிருஷ்ணா மேலணை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தில் நீரில் மூழ்கும் 20 கிராமங்களை வேறு இடத்தில் குடியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மறுவாழ்வு பணிகள், கட்டமைப்பு பணிகளுக்கு தேவையான நிதி ஒதுக்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்கு கூடுதலாக ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கப்படும்.
நில அளவீடுகள்
இந்த திட்டம் தொடர்பாக கோர்ட்டில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க சட்ட நிபுணர் நியமனம் செய்யப்படுவார். நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ள தேவையான பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். டிரோன் கேமரா மூலம் நில அளவீடுகள் மேற்கொள்ளப்படும். கூடுதலாக நில அளவீட்டாளர்களும் நியமனம் செய்யப்படுவார்கள். 3-வது கட்ட திட்டத்தின் கீழ் 5.94 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.