கள்ளக்காதலியுடன் தினமும் உல்லாசம் அனுபவிக்க... வாலிபர் செய்த நூதன திருட்டு

திருவனந்தபுரம் பூந்துறையை சேர்ந்த இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மூவாற்றுபுழா கடந்த 4-ந் தேதி அன்று ஒரு வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென்று மாயமானது. இதுதொடர்பாக மூவாற்றுபுழா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் திருடப்பட்ட காரின் பதிவு எண்ணை மாற்றி திருவனந்தபுரத்தில் ஓடுவதாக மூவாற்றுபுழா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் போலீசார் அந்த காரை திருவனந்தபுரம்-கொல்லம் புறவழிச்சாலையில் வைத்து மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்து இறங்கி ஓட முயன்ற மூவாற்றுபுழா பகுதியை சேர்ந்த அல்சாபித் (வயது 19) என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலியுடன் உல்லாசம் அனுபவிக்க காரை திருடியது அம்பலமானது.
அதாவது திருவனந்தபுரம் பூந்துறையை சேர்ந்த பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் அல்சாபித்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.பின்னர் அவரை அனுபவிக்க அல்சாபித் ஆசைப்பட்டார். இதற்காக வலை வீச, கள்ளக்காதலியும் சம்மதித்தார். ஆனால் விடுதிக்கு சென்றால் மாட்டி விடுவோம் என கருதிய அல்சாபித், காரை திருட முயன்றார்.
அதன்படி காரை திருடிய அவர் பதிவு எண்ணை மாற்றினார். பிறகு அந்த காரில் ஊர், ஊராக சென்று கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்தார். இந்தநிலையில் தான் அவர் போலீசிடம் சிக்கினார். ஆனால் அந்த சமயத்தில் கள்ளக்காதலி இல்லை.
கள்ளக்காதலி பற்றி போலீசார் விசாரித்த போது, அவர் 2 குழந்தைகளின் தாய் என்றும், அவரும் கடந்த 5-ந் தேதியில் இருந்து காணவில்லை என போலீசில் புகார் கூறப்பட்டது தெரியவந்தது. எனவே அவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.






