ஒவ்வொரு வருடமும் 200 வீரர்கள் காயங்களால் உடல் ஊனம் அடைகின்றனர்; ராணுவ மருத்துவர் தகவல்

ஒவ்வொரு வருடமும் 200 ராணுவ வீரர்கள் காயங்களால் உடல் ஊனம் அடைகின்றனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு வருடமும் 200 வீரர்கள் காயங்களால் உடல் ஊனம் அடைகின்றனர்; ராணுவ மருத்துவர் தகவல்
Published on

புதுடெல்லி,

இந்திய ராணுவத்தின் மருத்துவ சேவை இயக்குனர் ஜெனரலாக இருப்பவர் பிபின் பூரி. இவர் கூறும்பொழுது, சேதத்தினை கட்டுப்படுத்தும் அறுவை சிகிச்சை வழியே உயிரை காக்க வேண்டும் என்பதே முதன்மையான குறிக்கோள். ஒவ்வொரு வருடமும் 200 ராணுவ வீரர்கள் தீவிர ஊனத்தினால் பாதிப்படைகின்றனர்.

இது மிக பெரிய எண்ணிக்கை. போர் காயங்கள் காரணம் என்றாலும், மலை பகுதிகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் பனி சரிவு ஆகியவற்றால் ஏற்படும் காயங்கள் அதிகம். இது கடந்த 10 வருடங்களில் இருந்து கிடைத்த தகவலில் தெரிய வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர், வயிறு மற்றும் நெஞ்சு ஆகியவற்றிற்கு ஏற்படும் காயங்களால் குடல் மற்றும் நுரையீரல்கள் ஆகியவை பாதிக்கப்படுவதும் பல முறை நடந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

இந்திய ராணுவத்தில் 10 லட்சத்திற்கும் கூடுதலான வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு இந்தியா ஆகிய பகுதிகளில் தீவிரவாத ஒழிப்பு மற்றும் ஊடுருவல் ஒழிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com