கால்நடைகள் மீது மோதல்: 9 நாட்களில் 200 ரெயில்கள் பாதிப்பு

9 நாட்களில் கால்நடைகள் மீது மோதியதால் 200 ரெயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

ரெயில் தண்டவாளத்தில் திரியும் கால்நடைகள் மீது ரெயில்கள் மோதும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம், கால்நடைகள் மீது மோதியதால் காலதாமதம், சேதம் உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்த ரெயில்கள் எண்ணிக்கை 360 ஆக இருந்தது. செப்டம்பர் மாதம், இது 635 ஆக அதிகரித்துள்ளது.

நாள் ஒன்றுக்கு 22 ரெயில்கள் வீதம் பாதிக்கப்பட்டு வருகின்றன. நடப்பு அக்டோபர் மாதத்தின் முதல் 9 நாட்களில் கால்நடைகள் மீது மோதியதால் 200 ரெயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், இந்த ஆண்டில் இதுவரை 4 ஆயிரத்து 433 ரெயில்கள் தாமதமடைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. வடக்கு மத்திய ரெயில்வே மண்டலம்தான் கால்நடைகள் மோதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிநவீன 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில், இம்மாதம் மட்டும் 3-வது தடவையாக கால்நடைகள் மீது மோதி சேதம் அடைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com