2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தம்? - மத்திய அரசு விளக்கம்

2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தம் தொடர்பாக, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தம்? - மத்திய அரசு விளக்கம்
Published on

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். அதை தொடர்ந்து புதிதாக 2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டதாக நேற்று முன்தினம் செய்திகள் வெளியாகின.

இதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய பொருளாதார விவகார துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் நேற்று தெரிவிக்கையில், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அளவுக்கு அதிகமாகவே அச்சடிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது 35 சதவீதத்துக்கும் அதிகமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. தேவைக்கு ஏற்ப நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகிறது. எனவே 2 ஆயிரம் நோட்டுகள் அச்சடிக்கும் விவகாரத்தில் அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com