அக்னிபத் போராட்டத்தால் 2 ஆயிரம் ரெயில் சேவைகள் ரத்து: ரெயில்வே மந்திரி

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்ததால், ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன.

பீகாரில் இருந்து தெலுங்கானா வரை ரெயில்வே சொத்துக்கள் எரித்து சேதப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார்.

அப்போது அவர், "அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக ரெயில் சேவைகள் ரத்தானதால் பயணிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான தனி வரவு பராமரிக்கப்படவில்லை. இருப்பினும் 14.6.2022 முதல் 30.6.2022 வரையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களின்போது 2000 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது.

இதன் காரணமாகவும், ரெயில்வே சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாலும் ரெயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு ஏற்பட்டது. தோராயமாக மொத்தம் 102.96 கோடி ரூபாய் பயணிகளுக்கு திரும்பி அளிக்கப்பட்டது. அக்னிபாத் திட்டத்தின் காரணமாக ரத்து செய்யப்பட்ட அனைத்து ரெயில் சேவைகளும் மீட்டெக்கப்பட்டுள்ளன " என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com