2002 குஜராத் கலவரம்: நரோதா காம் பகுதியில் 11 பேர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 68 பேரும் விடுதலை..!

2002 குஜராத் கலவரத்தில் நரோதா காம் பகுதியில் 11 பேர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 68 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2002 குஜராத் கலவரம்: நரோதா காம் பகுதியில் 11 பேர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 68 பேரும் விடுதலை..!
Published on

அகமதாபாத்,

குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் 2002 ஆம் ஆண்டு சபர்மதி ரயில் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்தில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 59 பேர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து அம்மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக பரவலாக வன்முறைகள் அரங்கேறின.

இந்த நிலையில், 2002 குஜராத் கலவரத்தின் போது நரோதா காம் பகுதியில் 11 பேர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 68 பேரையும் அகமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. சிறப்பு நீதிபதி சுபதா பாக்ஸி மாலை 5.30 மணியளவில் தீர்ப்பை அறிவித்தார்.

பாஜக முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 86 பேர் இதில் குற்றம் சாட்டப்பட்டனர். 18 பேர் வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டனர். மீதமுள்ள 68 பேரை இன்று நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com