சமூக சீர்திருத்தவாதி மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த நாள் கொண்டாட்டம்; பிரதமர் பங்கேற்பு

சமூக சீர்திருத்தவாதி மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் அவரது ஓராண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
சமூக சீர்திருத்தவாதி மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த நாள் கொண்டாட்டம்; பிரதமர் பங்கேற்பு
Published on

புதுடெல்லி,

நாட்டில் சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்ட மற்றும் முக்கிய நபர்களின், அதிலும் அவர்கள் சமூகத்திற்கு பங்காற்றியதற்கு பதிலாக சமூகம் எதுவும் செய்யாமல் விடப்பட்டவர்களை கொண்டாடும் முனைப்பில் அதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.

இதன்படி, 200 ஆண்டுகளுக்கு முன்பு சமூகத்தில் நிலவிய சமத்துவமற்ற நிலையை எதிர்கொள்ளும் சமூக சீர்திருத்த பணியை மேற்கொள்வதற்காக ஆர்ய சமாஜம் என்ற அமைப்பை தொடங்கியவர் மகரிஷி தயானந்த சரஸ்வதி. 1824-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி பிறந்த இவர் ஏற்படுத்திய அமைப்பு, நாட்டில் கலாசார மற்றும் சமூக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளது. சமூக சீர்திருத்தங்கள் மற்றும் கல்வி ஆகியவற்றை வலியுறுத்தியது.

அவரது 200-வது பிறந்த நாளை முன்னிட்டு, அதனை நினைவுகூரும் வகையில் ஓராண்டுக்கு அதனை கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான நிகழ்ச்சி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்ளரங்கத்தில் இன்று காலை 11 மணியளவில் தொடங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். அதன்பின் நிகழ்ச்சியில், கூட்டத்தினர் முன் உரையாற்றுகிறார். இதனை முன்னிட்டு மத்திய மந்திரி ஜி.கே. ரெட்டி மற்றும் மத்திய கலாசார துறை இணை மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் மத்திய மந்திரி மீனாட்சி லேகி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com