அசாமில் முற்றிலும் பெண் அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் 201 வாக்குச்சாவடிகள்

அசாம் சட்டசபை தேர்தலில் கச்சார் மாவட்டத்தில் 201 வாக்குச்சாவடிகள் முற்றிலும் பெண் அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
அசாமில் முற்றிலும் பெண் அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் 201 வாக்குச்சாவடிகள்
Published on

கவுகாத்தி,

அசாம் சட்டசபை தேர்தலில் கச்சார் மாவட்டத்தில் 1,834 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 201 வாக்குச்சாவடிகள், முற்றிலும் பெண் அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிப்பதை ஊக்குவிப்பதற்காக, மாவட்ட நிர்வாகம் இதை செய்திருப்பதாக மாவட்ட துணை ஆணையர் கீத்தி ஜல்லி தெரிவித்தார். பெண்கள் நல திட்டங்களை நிறைவேற்றுவதில், கீர்த்தி ஜல்லிக்கு 4 பெண் உயர் அதிகாரிகள் உதவிகரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இந்த மாவட்டத்தில் வெறும் 10 வாக்குச்சாவடிகள்தான் பெண் அதிகாரிகள் நிர்வாகத்தில் இருந்தன. கச்சார் மாவட்டத்தில் ஏப்ரல் 1-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 12 லட்சம் ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com