ராஜஸ்தானில் இன்று மேலும் 2,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாநில சுகாதாரத்துறை

ராஜஸ்தானில் இன்று மேலும் 2,112 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் இன்று மேலும் 2,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாநில சுகாதாரத்துறை
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தானில் இன்று மேலும் 2,112 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,30,971 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு இன்று மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,456 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும் இன்று ஒரேநாளில் கொரோனா தொற்றிலிருந்து 1,805 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 54,252 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் தற்போது வரை 20,043 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com