தமிழகத்திற்கு இதுவரை 2.15 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

தமிழகத்திற்கு இதுவரை 2.15 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் பாரதி ப்ரவீன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு இதுவரை 2.15 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, தமிழகத்திற்கு இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்தும், மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் தடுப்பூசிகளை வழங்க தமிழக அரசு சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை குறித்தும் பாரிவேந்தர் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி ப்ரவீன், தமிழகத்திற்கு இதுவரை 2 கோடியே 15 லட்சத்து 71 ஆயிரத்து 920 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1 கோடியே 83 லட்சத்து 78 ஆயிரத்து 470 என்றும், கோவேக்சின் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 31 லட்சத்து 93 ஆயிரத்து 450 என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகம் உள்பட பல மாநிலங்கள் கூடுதல் தடுப்பூசிகள் வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்த அவர், மக்கள் தொகை, தடுப்பூசி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தடுப்பூசி விரயம் ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும் மத்திய இணையமைச்சர் பாரதி ப்ரவீன் விளக்கமளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com