தமிழகத்திற்கு இந்த ஆண்டு இதுவரை 220 டி.எம்.சி. காவிரி நீர் திறப்பு: கர்நாடகா


தமிழகத்திற்கு இந்த ஆண்டு இதுவரை 220 டி.எம்.சி. காவிரி நீர் திறப்பு: கர்நாடகா
x
தினத்தந்தி 13 Sept 2025 2:15 AM IST (Updated: 13 Sept 2025 2:15 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக நீர்ப்பாசனத்துறையை தன் வசம் வைத்துள்ள துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-கர்நாடகத்தில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 177 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) திறக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 220 டி.எம்.சி. காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட்டுள்ளோம். இன்னும் 4, 5 மாதங்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில் இன்னும் 200 டி.எம்.சி. நீர் கடலில் சென்று கலக்கும்.

இந்த நீரை தடுத்து நமது விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதற்காக ரூ.1,000 கோடியில் ஹேமாவதி இணைப்பு கால்வாய் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த கால்வாயில் எக்காரணம் கொண்டும் நீரை வீணாக்காமல் பார்த்து கொள்ளப்படும். நாம் ஏற்கனவே தமிழ்நாடு, மராட்டிய மாநிலத்துடன் நீருக்காக சண்டை போடுகிறோம். ஆனால் நமக்குள் நாமே சண்டை போட்டுக்கொள்ள கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story