அசாமில் இருந்து சட்டவிரோத வங்காளதேச நாட்டினர் 24 பேர் திருப்பி அனுப்பி வைப்பு: முதல்-மந்திரி

அசாமில் இருந்து சட்டவிரோத வங்காளதேச நாட்டினர் 24 பேர் திருப்பி அனுப்பி வைப்பு:  முதல்-மந்திரி
x

அசாமில் முறையான ஆவணங்கள் இன்றி வசிக்கும் வங்காளதேச நாட்டினர் உள்பட சட்ட விரோத குடியேறிகளை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

கவுகாத்தி,

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டு பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்த நிலையில், இந்திய எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, அசாமில் இருந்து வங்காளதேச நாட்டை சேர்ந்த 24 பேர் இன்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபற்றி முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறும்போது, ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்கள் தங்களுடைய சொந்த நாடு எதுவென மறந்து விட்டு, எல்லையின் இந்த பக்கம் அலைந்து, திரிந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால், இரக்கம் மிகுந்த நாம், சொந்த நாட்டிற்கு அவர்களை திருப்பி அனுப்பி வைத்திருக்கிறோம் என கூறியுள்ளார். அவர்களுக்கு இனிமையான பயணம் அமைய வாழ்த்துகிறோம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

அசாமில் முறையான ஆவணங்கள் இன்றி வசிக்கும் வங்காளதேச நாட்டினர் உள்பட சட்ட விரோத குடியேறிகளை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

1 More update

Next Story