ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழர்கள் உட்பட 25 பேர் கைது

ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 22 பேர் உட்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழர்கள் உட்பட 25 பேர் கைது
Published on

திருப்பதி,

ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 22 பேர் உட்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர். செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள 21 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஒரு லாரி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள், செம்மரம் வெட்டப் பயன்படும் ஆயுதங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com