ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு கிலோ மீட்டர் படி 25 சதவீதம் உயர்வு

ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு கிலோ மீட்டர் படி 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு கிலோ மீட்டர் படி 25 சதவீதம் உயர்வு
Published on

புதுடெல்லி,

ரெயில்வேயில் பிற ஊழியர்களுக்கு பயணப்படி வழங்கப்படுவதை போல, என்ஜின் டிரைவர்களுக்கு கிலோ மீட்டர் படி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊழியர்களுக்கான பயணப்படி கடந்த 2024 ஜனவரி 1-ந்தேதி முதல் அதிகரிக்கப்பட்டது.

அதைப்போல தங்களுக்கான கிலோ மீட்டர் படி யையும் உயர்த்த வேண்டும் என என்ஜின் டிரைவர் சங்கங்கள் தொடர்ந்து போராடி வந்தன. இதைத்தொடர்ந்து அவர்களுக்கும் கிலோ மீட்டர் படியை 25 சதவீதம் உயர்த்தி ரெயில்வே வாரியம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக நேற்று உத்தரவு வெளியிடப்பட்டது.

அதில், 'ரெயில்வே ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2024 ஜனவரி 1-ந்தேதி முதல் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, பல்வேறு பிரிவு களில் உள்ள என்ஜின் டிரைவர்களுக்கான கிலோ மீட்டர் படியும் உயர்த் தப்படுகிறது. இந்த உயர்வும் அதே தேதியில் முன்தேதியிட்டு வழங்கப்படும்' என கூறப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com