டெல்லியில் 25 ஆயிரம் பள்ளி குழந்தைகள் போதை பொருளுக்கு அடிமை; அதிர்ச்சி தகவல்

டெல்லியில் 25 ஆயிரம் பள்ளி குழந்தைகள் போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
டெல்லியில் 25 ஆயிரம் பள்ளி குழந்தைகள் போதை பொருளுக்கு அடிமை; அதிர்ச்சி தகவல்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மேலவையில் பூஜ்ய நேரத்தில் காங்கிரஸ் எம்.பி.யான டி. சுப்பராமி ரெட்டி பேசும்பொழுது, டெல்லியில் 25 ஆயிரம் பள்ளி குழந்தைகள் போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளனர். அதேவேளையில் போலீசார் இந்த விவகாரத்தில் கண்டும் காணாமலும் உள்ளனர் என கூறினார்.

டெல்லி மட்டுமின்றி வட இந்தியா முழுவதும் போதை பொருள் எளிதில் கிடைக்கிறது. ஒன்றுமறியாத குழந்தைகளின் வாழ்வை அழிக்கிறது. போதை பொருட்களுக்கு அடிமையானோரில் 83 சதவீதத்தினர் கல்வி அறிவுடையோர்.

ஆனால் மாபியா கும்பல் தலையீட்டால் இந்த விவகாரத்தினை மாநில அரசுகள் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதுபற்றி ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தரகாண்ட் மற்றும் இமாசல பிரதேச முதல் மந்திரிகள் சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்குள் பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் வழியே போதை பொருள் கடத்தப்படுகின்றன. இது கவனத்தில் கொள்ள வேண்டிய தீவிர விசயம். இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள தேசிய புலனாய்வு முகமையுடன் வேறு சில அமைப்புகளும் தங்களுக்குள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று சட்டவிரோத முறையில் உறுப்புகளை விற்பனை செய்து வருவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மற்றொரு விவகாரம் வெமி ரெட்டி என்பவரால் எழுப்பப்பட்டது.

இதில் ஈடுபடும் மருத்துவர்கள் கூட கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். சட்டவிரோத உறுப்பு விற்பனையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிப்பதுடன் இதனை தடுத்து நிறுத்த மசோதா ஒன்றும் வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com