பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக 2,587 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பஞ்சாப் மாநிலத்தில் இந்த வருடத்தில் அதிக அளவாக 2,587 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சண்டிகர்,

பஞ்சாப் சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இன்று புதிதாக 2,587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பஞ்சாபில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,10,466 ஆக அதிகரித்துள்ளது.

பஞ்சாபில் இன்று 38 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து, அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,280 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 1,011 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

பஞ்சாபில் தற்போது 16,988 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 1,87,198 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக பஞ்சாப் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com