

புதுடெல்லி,
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இதில் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த 21-ந்தேதி அமல்படுத்திய மத்திய அரசு, இந்த பணிகளை மேலும் முடுக்கி விட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 2.60 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்,
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இதுவரை 42 கோடியே 15 லட்சத்து 43 ஆயிரத்து 730 டோஸ் கொரோனா தடுப்பூசி அளித்துள்ளது. அவற்றில் இன்று காலை 8 மணி வரை 39 கோடியே 55 லட்சத்து 31 ஆயிரத்து 378 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளின் கையிருப்பில் 2 கோடியே 60 லட்சத்து 12 ஆயிரத்து 352 டோஸ் தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.