டெல்லியில் காவலர்கள் இருவருக்கு கொரோனா; போலீசார் 26 பேர் தனிமைப் படுத்தப்பட்டனர்

டெல்லியில் 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் காவலர்கள் இருவருக்கு கொரோனா; போலீசார் 26 பேர் தனிமைப் படுத்தப்பட்டனர்
Published on

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி டெல்லியில் 1,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் இரண்டு தலைமைக்காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தப்போலீசாருடன் இணைந்து பணியாற்றிய 26 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,387 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 437 ஆக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com