கேரள வெள்ளத்தால் 265 பேர் பலி, 36 பேரை இன்னும் காணவில்லை: மாநில அரசு தகவல்

கேரள வெள்ளத்தால் 265 பேர் பலியாகி இருப்பதாகவும், 36 பேரை இன்னும் காணவில்லை என்று மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கேரள வெள்ளத்தால் 265 பேர் பலி, 36 பேரை இன்னும் காணவில்லை: மாநில அரசு தகவல்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில், வரலாறு காணாத பேய்மழையில் நிலைகுலைந்த கேரளா, தற்போது இயல்பு நிலையை எட்டி வருகிறது. கேரளாவில் உள்ள 14 மாவட்டங்கள் மிக மோசமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனால், 31 சதவீத வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்த ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட வரலாறு காணாத சேதத்தை தீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்து உள்ளது வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலைகள் சேதமடைந்து உள்ளன. கடந்த ஆகஸ்ட் 8 முதல் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 265 பேர் பலியாகியுள்ளனர் என்றும் இன்னும் 36 பேரை காணவில்லை என்று மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

ஆசியவின் பெரிய அணையான இடுக்கி அணை, 26 ஆண்டுகளுக்கு பிறகு திறந்து விடப்பட்டது. இந்த அணையில் திறந்துவிடப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 51 பேர் பலியானதாகவும் 10 பேர் இன்னமும் காணவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக திரிசூரில் 43 பேரும், எர்ணாகுளத்தில் 38 பேரும், ஆழப்புழாவில் 34 பேரும், மலப்புரத்தில் 30 பேரும் பலியாகி இருப்பதாக அறிக்கையில் உள்ளது. 2,287 நிவாரண முகாம்களில் 8.69 லட்சம் மக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com