10 லட்சம் பேருக்கு 26,685 மாதிரிகள்: கொரோனா பரிசோதனை விகிதம் உயர்வு

இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 26,685 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதனால் கொரோனா பரிசோதனை விகிதம் உயர்ந்துள்ளது.
10 லட்சம் பேருக்கு 26,685 மாதிரிகள்: கொரோனா பரிசோதனை விகிதம் உயர்வு
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

நேற்று முன்தினம் 9 லட்சத்து 25 ஆயிரத்து 383 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் நாட்டில் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ள மாதிரிகளின் எண்ணிக்கை 3 கோடியே 68 லட்சத்து 27 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் பரிசோதனை விகிதம், 10 லட்சம் பேருக்கு 26 ஆயிரத்து 685 மாதிரிகள் என்கிற அளவுக்கு அதிகரித்துள்ளது.

நாட்டில் கடந்த ஜனவரி 1-ந்தேதி ஒரே ஒரு பரிசோதனைக்கூடம் புனேயில் இருந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் 1,524 பரிசோதனைக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு இருப்பது, பரிசோதனைகளை அதிகரிப்பதில் பக்க பலமாக உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com