இந்தியாவில் கொரோனா 2-அலை பாதிப்பால் 269 மருத்துவர்கள் உயிரிழப்பு: இந்திய மருத்துவ சங்கம்

இந்தியாவில் கொரோனா 2 அலை பாதிப்பால் 269 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2-அலை பாதிப்பால் 269 மருத்துவர்கள் உயிரிழப்பு: இந்திய மருத்துவ சங்கம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோர தாண்டவம் ஆடிவருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.

கொரோனா தொற்றுக்கு எதிராக முன்களத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்களும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் சிலரும் உயிரிழந்தும் வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா 2 அலை பாதிப்பால் 269 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,

இந்தியாவில் கொரோனா 2 அலை பாதிப்பால் 269 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலும் 30 முதல் 55 வயதுக்குள்பட்டவர்கள் ஆவர்.

பிகாரீல் நோய்த்தொற்று காரணமாக மொத்தம் 78 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 37, டெல்லியில் 28, ஆந்திரத்தில் 22, தெலங்கானாவில் 19, மராட்டியம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 14 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளனர், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com