மாரடைப்பால் 27 பேர் மரணம்: அவசர கதியில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் தந்தது காரணம்; முதல்-மந்திரி சித்தராமையா

கொரோனா தடுப்பூசி மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
மாரடைப்பால் 27 பேர் மரணம்: அவசர கதியில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் தந்தது காரணம்; முதல்-மந்திரி சித்தராமையா
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் உள்ள ஹாசன், சிக்கமகளூரு மற்றும் சிவமொக்கா மாவட்டங்களில் கடந்த சில நாட்களில் மட்டும் 27 பேர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். இதற்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியது காரணமாக இருக்குமோ? என்று மக்களிடையே அச்சம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இதுபற்றி பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறுகையில், 'அவசர கதியில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது கூட மாரடைப்பால் மரணம் அடைவதற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதனால் கொரோனா தடுப்பூசி மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது. மக்கள் யாருக்கேனும் நெஞ்சு வலி ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் உடல்நிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டாலோ, சுவாச பிரச்சினை ஏற்பட்டோலோ உடனே அவர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த பிரச்சினை குறித்து சுகாதார துறை மந்திரி தினேஷ் குண்டுராவும், சிறப்பு மருத்துவ குழுவினரும் விசாரித்து வருகிறார்கள்.' என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com