"ஸ்டாலின் தொடுத்த வழக்கால் ஓபிசி பிரிவுக்கு 27% இடஒதுக்கீடு உறுதியானது" - திருச்சி சிவா எம்.பி

ஸ்டாலின் தொடுத்த வழக்கால் ஓபிசி பிரிவுக்கு 27% இடஒதுக்கீடு உறுதியானது என்று திருச்சி சிவா எம்.பி மாநிலங்களைவில் கூறினார்.
"ஸ்டாலின் தொடுத்த வழக்கால் ஓபிசி பிரிவுக்கு 27% இடஒதுக்கீடு உறுதியானது" - திருச்சி சிவா எம்.பி
Published on

புதுடெல்லி,

இது குறித்து மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி கூறியதாவது:-

சுயமரியாதையின் கட்சியாக விளங்கும் திமுக அரசியலமைப்பு திருத்த மசோதாவை ஆதரிக்கிறது. நிர்பந்தத்தின் காரணமாகவே மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளது.

ஸ்டாலின் தொடுத்த வழக்கால் ஓபிசி பிரிவுக்கு 27% இடஒதுக்கீடு உறுதியானது. இடஒதுக்கீடு மூலம் ஓபிசி பிரிவினருக்கு 4,000 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும். ஓபிசி பிரிவினருக்கான அதிகபட்ச உச்ச வரம்பு 50% என்பதை நீக்க பரிசீலிக்க வேண்டும்.

2018ல் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவால் 678 ஓபிசி பிரிவினர் பாதிக்கும் சூழல் உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளவது பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com