5 ஆண்டுகளில் மட்டும் ஐ.ஐ.டி. மாணவர்கள் 27 பேர் தற்கொலை - சென்னைக்கு முதலிடம்

5 ஆண்டுகளில் மட்டும் ஐ.ஐ.டி. மாணவர்கள் 27 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதில் சென்னை முதலிடம் பெற்றுள்ளது.
5 ஆண்டுகளில் மட்டும் ஐ.ஐ.டி. மாணவர்கள் 27 பேர் தற்கொலை - சென்னைக்கு முதலிடம்
Published on

இந்தூர்,

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த பாத்திமா லத்தீப் என்ற கேரள மாணவி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019 வரை இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி.களில் தற்கொலை செய்து கொண்ட மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையை கேட்டு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் சந்திரசேகர் கவுர் என்பவர் மனு அளித்திருந்தார்.

அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. இதில் இந்தியாவில் உள்ள 10 ஐ.ஐ.டி.களில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 27 மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இந்த பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. (7 பேர்) முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் கரக்பூர் (5), டெல்லி, ஐதராபாத் (தலா 3), மும்பை, கவுகாத்தி, ரூர்க்கி (தலா 2), வாரணாசி, தன்பாத், கான்பூர் (தலா 1) ஆகிய ஐ.ஐ.டி.கள் உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com