டெல்லி ஐஐடி வளாகத்தில் பி.எச்.டி மாணவியின் உடல் இறந்த நிலையில் கண்டெடுப்பு

டெல்லி ஐஐடி வளாகத்தில் 27 வயது பி.எச்.டி மாணவியின் உடல் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி ஐஐடி வளாகத்தில் பி.எச்.டி மாணவியின் உடல் இறந்த நிலையில் கண்டெடுப்பு
Published on

புதுடெல்லி,

டெல்லி ஐஐடி பல்கலைக்கழகத்தில் மஞ்சுளா தேவக் என்ற மாணவி நீர்வளங்கள் குறித்த முனைவர் மேற்படிப்பை மேற்கொண்டு வந்தார். திருமணான இவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நளாந்த குடியிருப்பில் தங்கியிருந்து தனது படிப்பை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில்,மஞ்சுளா தேவக் நேற்று மாலை 7.40 மணியளவில் தனது அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போபாலில் வசித்து வரும் மஞ்சுளா தேவக்கின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மஞ்சுளா தேவக் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து டெல்லி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com