திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 28 ஆயிரம் பக்தர்கள் வருகை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியை தாண்டியது.
திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 28 ஆயிரம் பக்தர்கள் வருகை
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இலவச தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் சித்தூர் மாவட்ட பக்தர்கள் மட்டும் ஒரு நாளைக்கு 2 ஆயிரம்பேர் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது வெளி மாநில பக்தர்களுக்கும் இலவச தரிசன அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஏழுமலையான் கோவிலில் 28,849 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அவர்களில் 14,308 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியிருக்கிறார்கள். நேற்று முன்தினம் மட்டும் ரூ.2 கோடியே 61 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்திருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com