அரபி கடலில் ரூ.280 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

அரபி கடலில் ரூ.280 கோடி மதிப்பிலான ஹெராயின் என்ற போதை பொருளை பயங்கரவாத ஒழிப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அரபி கடலில் ரூ.280 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்
Published on

வதோதரா,

குஜராத் பயங்கரவாத ஒழிப்பு படையினர் மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் இணைந்து அரபி கடலில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் படகு ஒன்று சந்தேகத்திற்குரிய வகையில் சென்று கொண்டிருந்தது.

அதனை வழிமறித்த படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அந்த படகில் இருந்தவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

இதுதவிர, ரூ.280 கோடி மதிப்பிலான 56 கிலோ எடை கொண்ட ஹெராயின் என்ற போதை பொருளை அவர்கள் கடத்தி சென்றதும் தெரிய வந்தது. அவற்றை பயங்கரவாத ஒழிப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அந்த படகில் இருந்து 9 பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட 9 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com