இந்தியாவில் மேலும் 288 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் நேற்று 310 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 288 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மேலும் 288 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று 310 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 288 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,90,588-லிருந்து 4,49,90,876 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,870-லிருந்து 5,31,872 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 583 பேர் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,44,55,079 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,222 லிருந்து 3,925 ஆக குறைந்துள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com