உத்தரபிரதேச மாநிலத்தில் பயிர்க்கழிவுகளை எரித்த 29 விவசாயிகள் கைது

உத்தரபிரதேச மாநிலத்தில் பயிர்க்கழிவுகளை எரித்த 29 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் பயிர்க்கழிவுகளை எரித்த 29 விவசாயிகள் கைது
Published on

லக்னோ,

இந்தியாவில் டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு இடையில் சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளது. பயிர்க்கழிவுகளை எரிப்பது காற்று மாசு அதிகரிக்க காரணம் என்ற கருத்து நிலவுகிறது.

எனவே, பயிர்க்கழிவுகளை எரிக்க வேண்டாம் என விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டனர். பயிர்க்கழிவுகளை எரிப்பதை தடுப்பதற்கு மாநில அரசுகள் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டதாக சுப்ரீம் கோர்ட்டும் கண்டித்துள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் பயிர்க்கழிவுகளை எரித்த விவசாயிகள் 29 பேர் கைது செய்யப்பட்டனர். பயிர்க்கழிவுகளை எரித்ததற்காக முதல் முறையாக விவசாயிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது தவிர நூற்றுக்கணக்கான விவசாயிகளிடம் இருந்து அபராதமும் வசூலிக்கப்பட்டது. இதேபோல் பயிர்க்கழிவுகள் எரிப்பதை தடுக்க தவறியதற்காக அதிகாரிகள் சிலர் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com