வாலிபர் வயிற்றில் இருந்த 29 கரண்டிகள், 19 பிரஷ்கள்.. அதிர்ச்சியில் உறைந்த டாக்டர்கள்

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் வயிற்றில் 29 கரண்டிகள், 19 டூத் பிரஷ்கள் இருந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வாலிபர் வயிற்றில் இருந்த 29 கரண்டிகள், 19 பிரஷ்கள்.. அதிர்ச்சியில் உறைந்த டாக்டர்கள்
Published on

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் வினோதமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள ஹபூர் மாவட்டத்தின் புலந்த்ஷாஹர் பகுதியைச் சேர்ந்தவர் சச்சின். போதை பொருளுக்கு அடிமையான இவர் அங்குள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென அவருக்கு கடுமையான வயிற்றி வலி ஏற்பட்டு அலறி துடித்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அவரது வயிற்றில் ஸ்கேன் செய்ததில் 2 பேனா, 19 பிரஷ்கள், 29 கரண்டிகள் இருப்பதைக் கண்டு டாக்டர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனையடுத்து உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினர்.

மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு போதுமானதாக இல்லை என்று கூறி கோபத்தில் இந்த பொருட்களை விழுங்கினேன் என சச்சின் கூறியதாக கூறப்படுகிறது. மேலும் நாள் முழுவதும், தங்களுக்கு மிகக் குறைவான காய்கறிகளும், ஒரு சில சப்பாத்திகளும் மட்டுமே வழங்கப்படும் என்றும், வீட்டிலிருந்து ஏதாவது வந்தால், பெரும்பாலானவை தங்களுக்கு கொடுக்கப்படாது என்றும், சில சமயங்களில் ஒரு நாளைக்கு ஒரு பிஸ்கட் மட்டுமே கிடைக்கும் என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com