தமிழகத்திற்கு ரூ.2,976 கோடி வரி பகிர்வு நிதி - மத்திய அரசு விடுவிப்பு

பண்டிகை காலத்தையொட்டி 3 நாட்களுக்கு முன்பாகவே வரி பகிர்வு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு ரூ.2,976 கோடி வரி பகிர்வு நிதி - மத்திய அரசு விடுவிப்பு
Published on

புதுடெல்லி,

நவம்பர் மாதத்திற்கான வரி பகிர்வாக தமிழகத்திற்கு ரூ.2,976.10 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.72,961.21 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்திற்கு ரூ.13,088.51 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. பண்டிகை காலத்தையொட்டி 3 நாட்களுக்கு முன்பாகவே வரி பகிர்வு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com