நாட்டில் உள்ள 80 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது: ஐசிஎம்ஆர்

கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 80 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது: ஐசிஎம்ஆர்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தினசரி பாதிப்பாக 4 லட்சத்தை கடந்து மே மாதத்தில் அதிரவைத்தது. அதன்பிறகு தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது நிலவரப்படி நாட்டில் தொற்று பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.

இந்த சூழலில், ஐசிஎம் ஆர் இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா தொற்றின் 2-வது அலை இன்னும் குறையவில்லை.

நாட்டில் உள்ள 80 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது. எனவே எந்த அஜாக்கிரதையும் இருக்கக் கூடாது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா ஆகிய கொரோனா வகைகளுக்கு எதிராக தடுப்பூசிகள் திறம்பட செயலாற்றுகின்றன என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com