ஜார்கண்டில் 6 பேருக்கு மாற்றி போடப்பட்ட 2-வது டோஸ் தடுப்பூசி

சுகாதார ஊழியர்களின் தவறால் ஜார்கண்டில் 6 பேருக்கு தடுப்பூசி மாற்றி போடப்பட்டுள்ளது.
ஜார்கண்டில் 6 பேருக்கு மாற்றி போடப்பட்ட 2-வது டோஸ் தடுப்பூசி
Published on

ராஞ்சி,

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், தற்போது தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளதால், பல தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதற்கிடையில் ஒரு சில இடங்களில் தடுப்பூசிகள் மாற்றி போடப்பட்டு விட்டதாகவும், ஒரே நாளில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை போட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அந்த வகையில் ஜார்கண்ட் மாநிலத்தின் பலாமு மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா முதலாவது டோஸ் ஆக கோவேக்சின் போடப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு நேற்று 2-வது டோஸ் ஆக கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சுகாதார ஊழியர்களின் தவறால் 6 பேருக்கு தடுப்பூசி மாற்றி போடப்பட்டுவிட்டது. அவர்களுக்கு இதனால் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏதும் ஏற்படாது என்றபோதும், அந்த 6 பேரும் 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அனில்குமார் சிங் தெரிவித்தார். தடுப்பூசி மாற்றி போடப்பட்டதால் குறிப்பிட்ட சுகாதார மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com