ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 3 வீரர்கள் பலி

ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 3 வீரர்கள் பலி
Published on

இட்டாநகர்,

இந்திய ராணுவத்தின் கிரானெடியர்ஸ் ரெஜிமெண்ட் பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள் அருணாச்சலபிரதேச எல்லையில் பாதுகாப்புப்பணியை நிறைவு செய்துவிட்டு ராணுவ வாகனத்தில் அசாமின் ஜோர்ஹட் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

ராணுவ வீரர்கள் வாகனம் நேற்று அருணாச்சலபிரதேசத்தின் அப்பர் சுபன்ஸ்ரீ மாவட்டம் தபி கிராமத்தில் மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்தது.

அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 வீரர்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com