

பாலக்காடு:
பாலக்காடு நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு அரசியல் கொலைகள் நடைபெற்றது. இதில் ஒரு கொலையில் சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது போலீஸ் தரப்பில் பற்றி கூறப்படுவது.
பாலக்காடு மாவட்டம் நோம்பி கோடு என்ற இடத்தில் கடந்த 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி அளவில் பள்ளிவாசலுக்கு சென்று விட்டு தந்தையுடன் சுபையர் என்ற வாலிபர் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு சிலர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சுபையரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினார்கள். சுபையர் இந்தப்பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் தொண்டராகும்.
அதேபோல கடந்த 16ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 2 மணி அளவில் ஆர்எஸ்எஸ் தொண்டரான சீனிவாசன் என்பவரை அவர் வேலை செய்துவரும் கடைக்குள் புகுந்து வெட்டி கொலை செய்து விட்டு ஒரு சிலர் தப்பி ஓடினார்கள்.
இந்த இரண்டு அரசியல் கொலைகளும் பழிக்குப்பழி நடைபெற்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரண்டு கொலை வழக்கு சம்பந்தமாக ஏடிஜிபி விஜய் சாகர் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது.
இதையொட்டி சுபையர் கொலை செய்த வழக்கில் ரமேஷ், ஆறுமுகம் மற்றும் சரவணன் ஆகிய மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த மூன்று பேரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு போலீசார் காவலில் எடுத்து விசாரண நடத்தினார்கள். இன்று அவர்கள் கைது உறுதி செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சீனிவாசன் கொலை வழக்கில் ஒரு சில குற்றவாளிகள் குறித்து விவரங்கள் தெரிந்து உள்ளது. அவர்கள் தமிழ் நாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், அவர்கள் பற்றி தீவிர விசாரணை நடத்தி கைது செய்ய முயற்சிகள் நடந்து வருவதாகவும் விஜய் சாகர் தெரிவித்தார்.