கொல்கத்தாவில் ஆயுதங்கள், வெடிமருந்துகளுடன் சிக்கிய 3 பேர் கைது

ஆபத்தான ஆயுதங்களை கடத்திய உத்தர பிரதேசத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொல்கத்தா,

கொல்கத்தாவின் சிறப்பு அதிரடிப் படை போலீசார் புர்ராபஜார் பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரில் சோதனை நடத்திய போது அதில் இருந்த துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை கண்டுபிடித்தனர்.

அதில் ஒரு 9 எம்.எம் தானியங்கி துப்பாக்கியும், 7 எம்.எம். தானியங்கி துப்பாக்கியும், நான்கு வெற்று மேகசின்கள் மற்றும் 17 வெடிமருந்துகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த ஆபத்தான ஆயுதங்களை சிக்கிய உத்தர பிரதேசத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com