அந்தமானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

10 கிலோ மீட்டர் ஆழத்தில் 4.7, 4.6, 4.7 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்
Published on

புதுடெல்லி,

அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.09 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 9.43 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.17 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து காலை 11.22 மணியவில் ரிக்டர் 4.6 அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இரு நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். இந்த நிலையில் மதியம் 12.06 மணியளவில் ரிக்டர் 4.7 மணியளவில் 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. முன்னதாக கடந்த 25ம் தேதியில் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com