அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் - மக்கள் பீதி

அருணாச்சல பிரதேசத்தில் ரிக்டர் 3.1, 2.7, 2.8 அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் - மக்கள் பீதி
Published on

புதுடெல்லி,

அருணாச்சல பிரதேசம் மேற்கு காமெங் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நள்ளிரவு 11.55 மணியளவில் ரிக்டர் அளவில் 3.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங் பகுதியிலும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 1.10 மணிக்கு ரிக்டர் 2.7 அளவில் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் பிச்சோம் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 5.48 மணியளவில் ரிக்டர் அளவில் 2.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது,

அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. முன்னதாக, ராஜஸ்தானில் ரிக்டர் 3.5 அளவில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com