ஐ.ஆர்.சி.டி.சி. வலைதளத்தில் இருந்து 3 கோடி போலி கணக்குகள் நீக்கம்: மத்திய அரசு தகவல்

நடப்பு ஆண்டில் இதுவரை 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு உள்ளன என மத்திய ரெயில்வே மந்திரி கூறினார்.
ஐ.ஆர்.சி.டி.சி. வலைதளத்தில் இருந்து 3 கோடி போலி கணக்குகள் நீக்கம்:  மத்திய அரசு தகவல்
Published on

புதுடெல்லி

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, நீண்ட தூர ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவது தொடர்பான துணைநிலை கேள்வி ஒன்றுக்கு மத்திய ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் பதிலளித்து பேசினார்.

அவர் கூறும்போது, ரெயில்களில் 70 சதவீதம் அளவுக்கு பொது பெட்டிகளும், படுக்கை வசதி பெட்டிகளும் உள்ளன. ஏ.சி. இல்லாத பிரிவுகளில் 78 சதவீத இருக்கைகள் உள்ளன. மக்களின் சவுகரியம் மற்றும் போதிய வசதிகளை உறுதி செய்வதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது என உறுதிபடுத்திய அவர் நடப்பு ஆண்டில் இதுவரை 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு உள்ளன என கூறினார்.

ரெயில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஐ.ஆர்.சி.டி.சி. வலைதளத்தில் இருந்து 3 கோடி போலி கணக்குகள் நீக்கப்பட்டு உள்ளன என அவர் கூறினார். ரெயில்வேயின் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால், தொடர் விபத்துகள் 90 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளன என்றும் அவர் கூறினார்.

அதற்கு முன், இந்த மாதத்தில் மறைந்த முன்னாள் எம்.பி.க்களான விஷ்ணு மோடி மற்றும் தத்த மேகி ஆகியோருக்கு அவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது உறுப்பினர்களும், சபாநாயகர் ஓம் பிர்லாவும் அமைதியாக எழுந்து நின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com