ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல்; 3 வீரர்கள் உள்பட 5 பேர் காயம்

தீவிரவாதிகளின் கையெறி குண்டு தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 3 வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 2 பேர் காயமடைந்து உள்ளனர்.
ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல்; 3 வீரர்கள் உள்பட 5 பேர் காயம்
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் பதேகடல் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களால் கையெறி குண்டு ஒன்று வீசப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 3 வீரர்கள் மற்றும் பொதுமக்களில் பெண் உள்பட 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com