

புதுடெல்லி,
உள்துறை மந்திரி அமித்ஷா, மூன்று நாள் பயணமாக இன்று இரவு மேற்கு வங்கத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு சனிக்கிழமை டெல்லி திரும்புகிறார்.
தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்குகிறார். மாநாடை முடித்துவிட்டு இன்று இரவு 8 மணிக்கு சென்னையில் இருந்து மேற்கு வங்கத்தின் சிலிகுரி பாக்டோக்ரா விமான நிலையத்திற்கு சென்றடைவார். அங்கிருந்து சுக்னா என்கிற பகுதியில் இரவு தங்குகிறார். நாளை அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
* எஸ்.எஸ்.பி எல்லைப் பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு சென்று அங்குள்ள வீரர்களுடன் கலந்துரையாடுகிறார்.
* வீரர்களுடன் ‘பாரா கானா’ நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
* சிலிகுரி கவாகாலி மைதானத்தில் புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
* எல்லைப் பாதுகாப்பு மற்றும் புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்கம் தொடர்பான ஆய்வுக் கூட்டங்களுக்கு அமித் ஷா தலைமை வகிக்கிறார்.
* உள்நாட்டு ஆய்வுக் கூட்டங்களை நடத்த உள்ளார்.
இதேபோல் சனிக்கிழமையிலும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கிறார். இந்த ஆய்வுக்கூட்டங்களை முடித்துவிட்டு, பாக்டோக்ரா விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்படுகிறார்.
சிலிகுரி வழித்தடம் என்பது நேபாளம், பூடான் மற்றும் வங்கதேச எல்லைகளுக்கு அருகே அமைந்துள்ளது. இந்த வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கியமான பகுதியாக இருப்பதால், அமித் ஷா-வின் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.